Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எல்லைப் போராளிகளின் தியாகங்களை நினைவுகூறுவோம்" - தமிழ்நாடு தினத்தில் விஜய் வாழ்த்து!

02:57 PM Nov 01, 2024 IST | Web Editor
Advertisement

நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பேசிய விஜய், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கட்சியின் கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மாநாடு வெற்றியடைச் செய்ததற்காக கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய் 2026-ல் நம் இலக்கை அடைவோம் என தெரிவித்தார்.

தவெக கட்சியை தொடங்கியது முதல் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தும் தொண்டர்களை மரியாதை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தினமான நவம்பர் 1ம் தேதியான இன்று விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாவது..

“ 1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார்.

இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.” என விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
NOV 1tamilnadu dayTamizhaga Vetri KazagamTVK Vijayvijay
Advertisement
Next Article