"தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்" - வடகொரிய அதிபர்
கடந்த திங்களன்று வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் வானில் ஏவிய சில நொடிகளில் வெடித்துச் சிதறிய நிலையில், தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார்.
வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.
இதனிடையே கடந்த திங்களன்று வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் வானில் ஏவிய சில நொடிகளில் வெடித்துச் சிதறியது. எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. வடகொரியாவின் இந்த ராக்கெட் ஏவுதலுக்கு ரஷ்யா உதவியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அறிவியல் ஆய்வகத்தில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜான் உங், "ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் வைத்திருப்பது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தச் செய்யும் முக்கியப் பணியாகும்.