Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தலைவருக்கு பன்றோம்... தீயா இருக்கணும்ல" - வெளியானது கூலி படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுளள கூலி திரைப்படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் வெளியானது.
06:55 PM Jun 25, 2025 IST | Web Editor
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுளள கூலி திரைப்படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் வெளியானது.
Advertisement

‘வேட்டையன்’ படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. ரஜினிகாந்தின் 171வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், கிஷோர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.

Advertisement

இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு ‘சிக்கிடு வைப்…’என்ற தலைப்பில் சிறிய அளவிலான பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான ‘சிக்கிடு வைப்…’ பாடலின் மியூசிக் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை, டி.ராஜேந்தர் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
anirudhChikituCoolieLokeshRajiniRajinikanthsuperStarThalaivar
Advertisement
Next Article