மெட்ரோவில் சுற்றி பார்க்க போறோம்.. - இன்று மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.5 மட்டுமே..!
12:04 PM Dec 17, 2023 IST
|
Web Editor
இந்நிலையில், இந்த கட்டண சலுகை டிசம்பர் 17-ம் தேதி (நாளை) மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் செய்யலாம். மக்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisement
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று ஒருநாள் மட்டும் ரூ.5 க்கு கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் டிசம்பர் 3-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்று முழுவதும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (பேடிஎம், வாட்ஸ்அப், போன்பே) முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் ரூ.5 என்ற சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக அன்று இச்சலுகையை பலரால் பயன்படுத்த முடியவில்லை.
க்யூஆர் பயணச்சீட்டு, பேடிஎம், ஃபோன் பே பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே ரூ. 5 கட்டணச் சலுகை என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Article