Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பெண் சக்திக்கு தலைவணங்குவோம்" - பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து !

உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு தலைவணங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
01:32 PM Mar 08, 2025 IST | Web Editor
Advertisement

நாடு முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அதில், "உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு தலைவணங்குவோம். நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது. எனது சமூக வலைதள கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்கள் கையாள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகளிர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள கணக்கை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
modiprime ministerWisheswomens day
Advertisement
Next Article