Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசரகாலத்தை நினைவூட்டுகிறது” - ஆளுநர் மாளிகை!

05:29 PM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

“சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது” என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

Advertisement

தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்என். ரவி தனது உரையை வாசிக்காமலேயே 3 நிமிடங்களிலேயே அவையிலிருந்து வெளியேறினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டதே இதற்கு காரணம் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக மீண்டும் எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை, “சட்டசபையின் நடவடிக்கை அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது” என கூறியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;

“இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.

அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
emergencyGoverner RN RaviLegislative AssemblyTN Govt
Advertisement
Next Article