Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’கருடன்’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் லெஜண்ட் சரவணன் - வெளியான புதிய அப்டேட்!

01:19 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை 'கருடன்' பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

தொழிலதிபர் சரவணன் நடிப்பில், ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான  ’லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் லெஜன்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,  அவரின் அடுத்த படத்தை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’கருடன்’  படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.  இந்த படத்திற்கான லெஜண்ட் சரவணனின் புதிய லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை  படத்தின் இயக்குனரான துரை செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.  அவர் மீசை, தாடி, கையில் Gun உடன் காணப்படுகிறார்.  இதற்குமுன் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிசட்டை, பட்டாஸ், கொடி போன்ற படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Durai SenthilkumarLegend Saravanmovie updateSaravan
Advertisement
Next Article