Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆயுத பூஜையை ஆட்டோ ஓட்டுநர்களுடன் கொண்டாடிய ‘லெஜண்ட்’ சரவணன்!

09:48 PM Oct 24, 2023 IST | Web Editor
Advertisement

ஆட்டோ ஓட்டுநர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடன் இணைந்து ஆட்டோ ஒட்டி மகிழ்ந்தார் நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன்.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று விஜயதசமி கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழிலதிபரும் நடிகருமான ‘லெஜண்ட்’ சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடினார்.

சென்னையில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய பின் பேசிய லெஜண்ட் சரவணன்,  “இந்த விஜயதசமி நாளை என் அன்பு உடன்பிறப்புகளோடு கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் இரண்டு விஷயங்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.  முதலாவது ஓடி, ஆடி உழைப்பது. இரண்டாவது மற்றவர்களுக்கு அன்பை வாரி வழங்குவது. ஏனென்றால், நாம் எதை விதைக்கிறோமோ, அதுவே பல மடங்காக நமக்கு கிடைக்கும்.

ஒரு நல்ல சமூதாயம் உருவாக அன்பை வாரி வழங்க வேண்டும். அப்போதுதான் மனித நேயம் பெருகும். அன்பு என்பது பாலமாக அமைந்து அனைவரையும் அரவணைத்து கொண்டு போகும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: நயன்தாரா 75 படத்தின் டைட்டில் வெளியீடு – ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டது படக்குழு..!

பின்னர் ‘லெஜண்ட்’ சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். அவர் ஆட்டோவை இயக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
actorAutoDriversAyudhaPoojabusinessmanLegendSaravananSaraswathiPoojaTamilNaduVijayadasami
Advertisement
Next Article