Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“புஸ்ஸி ஆனந்தை விட்டு விடுங்கள்” -விஜய்-க்கு அட்வைஸ் கொடுத்த தயாரிப்பாளர் K. ராஜன்...!

08:52 PM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

“புஸ்ஸி ஆனந்தை விட்டு விடுங்கள்”  என விஜய்-க்கு  தயாரிப்பாளர் K. ராஜன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட "அருவா சண்ட" படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி.பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது. பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான "மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்..." என்ற முதல் பாடல்  ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர்.

தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன்,ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய  தயாரிப்பாளர் K. ராஜன் “ நன்றி என்பது பழைய கதாநாயகர்கள் கிட்ட இல்ல. நான் யார் என்று சொல்ல விரும்ப வில்லை. இனி வரும் கதாநாயகர்கள் நன்றியுடன் இருங்கள். நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அவரை எல்லாருடைய சார்பிலும் வாழ்த்துகிறேன். புரட்சித் தலைவர் மக்களோடு மக்களாக வாழ்ந்து இருந்தார். காங்கிரஸ், திமுகவிலிருந்தார். அவருக்கு ஈடு இல்லை. நீங்கள் வெற்றி பெற எம்ஜிஆர் செய்ததில் துளி அளவாது செய்யுங்கள். நிறையா நல்ல காரியங்கள் செய்கிறார் விஜய்.

இருந்தாலும் புஸ்ஸி ஆனந்தை விட்டு விட்டு நேரடியாக நீங்கள் இறங்கிப் பேசுங்கள். என்ன கொள்கை இருக்கிறது என்பதை மக்களிடம் இறங்கிப் பேசுங்கள். மக்களோடு மக்களாக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள். விஜய் குழு அமைக்கிறார் , மாணவர்களுக்கு நிறையா செய்கிறார் நல்ல விசயம். விஜய் வாங்கும் சம்பளம் 200 கோடி என்று சொல்கிறார்கள் இப்போது அதை விடுவதாகக் கூறுகிறார்கள். அது இல்லாமல் மக்களுக்குச் செய்வது கஷ்டம் தான். உதயநிதி போல் மக்களோடு மக்களாக இருங்கள். பெரியார் பற்றிப் படிக்கும் பொழுது அண்ணா, கலைஞர் பற்றியும் படிக்க வேண்டும். 2026ல் தான் தேர்தல் களத்தில் இறங்கப் போவதாகக் கூறுகிறீர்கள். அதுவரை உங்களது தொண்டர்களுக்கு நிறையா சொல்லி கொடுங்கள்”  என தயாரிப்பாளர் K. ராஜன் பேசினார்.

Advertisement
Next Article