Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓசூரில் அதிர்ச்சி | பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு... குற்றவாளி வேறொரு நீதிமன்றத்தில் சரண்!

02:35 PM Nov 20, 2024 IST | Web Editor
Advertisement

ஓசூரில் நீதிமன்ற வளாகத்திலேயே இளம் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம், இளம் வழக்கறிஞர் கண்ணன் (30) என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஓசூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் பொழுது மர்ம நபர் ஒருவர் கண்ணனை சரமாரியாக ஓட ஓட, துரத்தி வெட்டியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கேயே கண்ணன் சுருண்டு விழுந்தார்.

அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கொலையாளி அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
HosurHosur CourtLawyer
Advertisement
Next Article