Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், செய்திகள் குறித்து அறிய வாட்ஸ்-அப் சேனல் துவக்கம்!

06:35 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.
பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் Facebook, Instagram, Twitter, Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : “பறவைகளை ரசிப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” – ஆராய்ச்சியாளர்கள் கருத்து!

இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் "TNDIPR, Govt. of Tamil Nadu" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்யவும்.

தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் குறியீட்டை தெரிவிக்கப்படுகிறது"

இவ்வாறு தமிழ்நாடு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChannelCMOTamilNaduMKStalinTamilNaduTNGovtwhatsapp
Advertisement
Next Article