Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நில மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!

08:05 AM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த காட்டூரை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து வாங்கியதாக
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 16ஆம் தேதி கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது.

இதனிடையே சிறையில் இருந்த விஜயபாஸ்கரை  சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் ஜாமீன் குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் மனு போடப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்றும், இன்று நள்ளிரவும் நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். காலை, மாலை என இருவேளைகளிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். மதியம் வாங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இது தொடர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKCBCIDconditional bailLand Scam CaseMR Vijayabaskar
Advertisement
Next Article