Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிசோரமில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் லால்துஹுமா - நாளை மறுநாள் பதவியேற்பு விழா!

01:00 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

ஜோரம் மக்கள் இயக்கத்தின்  தலைவர் லால்துஹுமா புதன்கிழமை காலை ஆளுநர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அளித்து உரிமை கோரினார்.

Advertisement

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ.,7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 4ம் தேதி எண்ணப்பட்டன.  இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்கிற நிலை இருந்தது.  இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது.  பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களை பிடித்தது.  இதையடுத்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது.

இந்த இயக்கத்தின் தலைவரான 74 வயது லால்துஹுமா இருந்து வருகிறார்.  இவர் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.  இவர் 1982-களில் முன்னாள் பிரதமர் இந்திரா  காந்தியின் பாதுகாவலராக பணியாற்றினார்.  ஒய்வு பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார்.  2019-ம் ஆண்டு ஜோரம் மக்கள் இயக்கத்தினை துவக்கி மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கட்சியாக வளர்த்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான லால்துஹுமா புதன்கிழமை காலை ஆளுநர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அளித்து உரிமை கோரினார்.  இதனைத் தொடர்ந்து,  லால்டுஹோமாவின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
assembly electionElectionLaldhuhomaMizoramZoram Peoples Movement
Advertisement
Next Article