Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தந்தையான லலித் சால்வே - யார் இவர்?

03:41 PM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவில் 3 பாலின அறுவை சிகிச்சைக்கு பின், ஆணாக மாறிய காவலர், தந்தையாகியுள்ளார். 

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த லலித் சால்வே (முன்னாள் லலிதா) ஜூன் 1988-ம் ஆண்டு பிறந்தவர்.  இவர் 2010-ம் ஆண்டு மகாராஷ்டிரா காவல்துறையில் சேர்ந்துள்ளார். பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கான் நகர காவல் நிலையத்தில் இவர் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பெண்ணாக வளர்ந்த சால்வே, 2013-ம் ஆண்டில் பாலின மாற்றத்திற்கான அறிகுறிகளை உணரத்தொடங்கியுள்ளார். மேலும் தனது உடலில் சில மாற்றங்களை கவனிக்கத் தொடங்கியுள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், காரியோடைப்பிங் எனப்படும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனையில் அவரது உடலில் 'ஒய்' குரோமோசோம் இருப்பதை உறுதிசெய்துள்ளார்.

பின்னர் நவம்பர் 2017-ம் ஆண்டு, அவர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய ஒரு மாத விடுப்பு கோரி பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விடுப்பு பெற்றார். பின்னர் 2018 முதல் 2020-ம் ஆண்டிற்கு இடையில் அவருக்கு மும்பையில் உள்ள அரசு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில், அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதற்கிடையே, பிப்ரவரி 16, 2019 அன்று சீமாவை சால்வே மணந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 15-ம் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாலின மாற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து அவர் 30 பேருக்கும் மேலான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

Tags :
fatherLalit SalveMaharashtraNews7Tamilnews7TamilUpdatesPolice ConstableSex Change Surgery
Advertisement
Next Article