Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மே தின விடுமுறை - மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!

04:06 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

நாளை மே. 1 ஆம் தேதி உழைப்பாளர் விடுமுறை தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே, இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை விடுமுறை தினத்தை சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;                                                                                                                                                                                                                        நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
International Workers DayMetroMetro Trains
Advertisement
Next Article