Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2025 ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் #LaapataaLadies!

02:22 PM Sep 23, 2024 IST | Web Editor
Advertisement

நடப்பாண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

திரையுலகினரின் திறமையை பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு அங்கீகாரம் செலுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் பல்வேறு சினிமா விருதுகள் வழங்கப்படுகிறது. அவை எல்லாவற்றையும் ஒப்பிடுகையில், திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு 97-வது ஆஸ்கர் விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு தமிழ்ப் படங்களான மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா ஆகியவை உட்பட 29 இந்தியத் திரைப்படங்கள், இந்திய திரைப்பட கூட்டமைப்பால் பரிந்துரைக்கப்பட்டன. இதில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக லாபதா லேடீஸ் தேர்வாகியுள்ளது.

லாபதா லேடீஸ்!

அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரிப்பில் பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம்  உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘லாபதா லேடீஸ் ‘. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே படம்.

எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப்புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவர்களின் உணர்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ்.

Tags :
Film Federation of IndiaLaapataa LadiesOscarsOscars 2025
Advertisement
Next Article