நீலகிரி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல்.முருகன்!
11:52 AM Apr 15, 2024 IST
|
Web Editor
Advertisement
உதகையில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தன்னுடைய தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
Advertisement
அதன்படி,
- உதகையில், திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, ‘திரைப்பட நகரம்’ அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.
- உதகையில் சர்வதேச தரத்தில் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம்’ உருவாக்கப்படும்.
- உதகை காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
- மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனைவருக்கும் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள HPF தொழிற்சாலையானது நவீன தொழிற் பூங்காவாக (IT Park) அமைத்து தரப்படும்.
- மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இருப்புப்பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- உதகை நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களுக்கு மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.
- தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
- படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சுற்றுலா மையம், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும்.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் முகாம் அலுவலகம் திறக்கப்படும்.
- அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மகளிருக்கு தனி கல்லூரி அமைக்கப்படும்.
- உதகையில் மூடப்பட்ட எச் பி எஃப் தொழிற்சாலையில் ஐடி பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீலகிரியில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- மேட்டுப்பாளையம், அவிநாசி, சத்தியமங்கலம், உதகை ஆகிய பகுதிகளில் அதிநவீன கால்நடை மருத்துவமனைகள் அமைத்து தரப்படும்.
- வெற்றி பெற்ற 500 நாட்களில் 59 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என்பன உள்ளிட்ட 59 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் வெளியிட்டார்.
Next Article