Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'கும்கி-2' - கதாநாயகனின் அறிமுக போஸ்டர் வெளியீடு..!

பிரபு சாலமன் இயக்கும் ’கும்கி 2’ படத்தின் கதாநாயகன் மதியின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது.
07:41 PM Oct 04, 2025 IST | Web Editor
பிரபு சாலமன் இயக்கும் ’கும்கி 2’ படத்தின் கதாநாயகன் மதியின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது.
Advertisement

பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 'கும்கி'. இந்த படம் மூலம் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் மற்றும் விமர்சனம் ஆகிய இரண்டிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்த நிலையில், பிரபு சாலமன் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகின்றார். 'கும்கி 2' என பெயரிடப்ட்டுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படக்குழு, இப்படத்தின் கதாநாயகன் மதியின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Tags :
cinemauptateKumkikumki2latestNewsprabhusolomon
Advertisement
Next Article