Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Kumbakonam | ரூ.6 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்!

07:27 AM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு விநாயகருக்குக் குபேர அலங்காரம் செய்யப்பட்டது.

Advertisement

நாடுமுழுவதும் எதிர்வரும் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. ஒவ்வொரு விநாயகர் ஆலயத்திலும் விநாயகருக்கு மாறுபட்ட அலங்காரங்கள் செய்து வழிபட்டுவருகிறார்கள். கும்பகோணம் மடத்து தெருவில் உள்ளது பகவத் விநாயகர் கோயில். இந்த கோயில் கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு வகையான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அமைக்கப்படும். இந்த விழாவில் பகவத் விநாயகருக்குப் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது முக்கியமான நிகழ்வாகும்.

இந்நிலையில் பகவத் விநாயகர் கோயிலில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதனைதொடர்ந்து விழாவின் நான்காம் நாள் நிகழ்வாக நேற்று பகவத் விநாயகருக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் குபேர விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரம் செய்யப்பட்டிருந்த குபேர விநாயகரை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Tags :
Bhagavad VinayagarCurrencyDecorationdevoteesKumbakonamTemple
Advertisement
Next Article