Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடிவுபெறும் - #ISRO தலைவர் சோம்நாத் தகவல்!

11:46 AM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை சுமந்தபடி SSLV-D3 என்ற ராக்கெட் சற்று முன்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்று பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:

”இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன.

தொடர்ந்து செயற்கைக்கோளின் செய்லபாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது மூன்றாவது உந்து வாகனம், இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவுபெற்றது என்று அறிவிக்கலாம்.

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ.தொலைவில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosimeter) ஆகிய 3 ஆய்வுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யுவி கதிர்வீச்சு அளவைகண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களைவிண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும். குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி இந்த அம்சங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டது. கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும்”

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத தெரிவித்துள்ளார்.

 

 

Tags :
EOS 08 Mission🛰️ISROSSLVSSLVD 3
Advertisement
Next Article