Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை - விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு!

11:43 AM Aug 22, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக சிவராமன் உட்பட  11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை  இன்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஐ.ஜி. பவானிஸ்வரி மற்றும் பல்நோக்கு குழு தலைவரும் சமூக நலத்துறை செயலாளருமான ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், மருத்துவ குழுவினர், மனநல ஆலோசனைக் குழு, காவல்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
KrishnagiriSexual harassmentSpecial Investigation Team
Advertisement
Next Article