Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#36thGironoFilmFestival | இயக்குனர் சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' தேர்வு

01:28 PM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

ஜிரோனா திரைப்பட விழாவில், இயக்குனர் சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இது பெற்றுள்ளது. இதற்கிடையில், ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இதையும் படியுங்கள் : மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

மேலும், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றது. இந்நிலையில் மற்றுமொரு அங்கீகாரமாக, ஸ்பெயின் நாட்டில் 36 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஜிரோனா திரைப்பட விழாவில் சிறந்த படமாக இயக்குனர் சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக ஒரு தமிழ் திரைப்படம் இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/onlynikil/status/1845751655553437987?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1845751655553437987|twgr^43ff4601cf63ccfce5a8ede30535e75e775362a5|twcon^s1_&ref_url=https://www.dailythanthi.com/cinema/cinemanews/another-recognition-for-kozhippannai-chelladurai-1126199
Tags :
directorgirono film festivalKozhiPannaiChelladurainews7TamilUpdatesSeenuRamasamyYogibabu
Advertisement
Next Article