Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோயம்பேடு ஆயுதபூஜை சிறப்பு சந்தை | விற்பனையாகாததால் குப்பையில் தர்பூசணிகள் - வியாபாரிகள் கவலை!

01:58 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

ஆயுதபூஜையை முன்னிட்டு வெவ்வேறு இடங்களில் சந்தைகள் போடப்பட்டதால், வியாபாரம் மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் தேவையான பூஜை பொருட்களை, குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இங்கு ஏராளமான வியாபாரிகள் கடை போடுவர்.

இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்ப்பட்டது. அங்கு பொரி மட்டும் விற்க அனுமதிக்கப்பட்டது. பழச்சந்தை எதிரே சாலையோரம் தோரணங்கள், பூசணிக்காய் விற்கவும், 14-வது நுழைவுவாயிலில் வாழைக்கன்றுகளை விற்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனால் வியாபாரம் எதுவும் சரியாக நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளானர்.

மேலும் பூசணிக்காய்களை ஆங்காங்கு கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது;

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த உணவு தானிய அங்காடி பகுதியில், இந்த சிறப்பு சந்தை போடப்பட்டது. அதற்கு முன்னதாக பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் சந்தைகளுக்கு நடுவே இந்த சிறப்பு சந்தை அமைக்கப்படும். இதன் மூலம் விற்பனை சிறப்பாக இருக்கும். இந்த முறை ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு திசையில் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பூஜை பொருட்களை வாங்க முடியவில்லை. பழம் வாங்க பழ சந்தைக்கும், பூக்களை வாங்க மலர் சந்தைக்கும் செல்ல வேண்டியுள்ளது. இங்கெல்லாம் சுற்றி வருவதற்குள் மயக்கமே வந்துவிடும்போல் இருக்கிறது. இந்த முறை எங்களுக்கு சிறப்பு சந்தை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.

வியாபாரம் சரியாக நடைபெறாததையடுத்து, நூற்றுக்கணக்கான பூசணிக்காய்களை வியாபாரிகள் அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் பெரும் நஷ்டம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Next Article