Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Kovai | விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் | நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு! 

08:30 AM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

Advertisement

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயகர் அவதரித்ததாக கருதப்படுகிறது. முழு முதற்கடவுளாக இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.

இன்று விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே கோயில்களில் அதற்கான சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளும், அலங்காரங்களும் நடைபெற்று வந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரபல விநாயகர் கோயில்களான காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.

பிரபல விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் விநாயகருக்கு தனி சன்னதி இருப்பதால் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பிரபல கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் விநாயகரை வணங்குவதற்காக குவிந்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவு குவிந்து வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும்,16 வகையான வாசனை திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகத்துடன் நடத்தப்பட்ட பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Tags :
Vinayaka ChaturthiVinayaka Chaturthi Special
Advertisement
Next Article