Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் - IMA அறிவிப்பு!

07:19 PM Oct 13, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (அக்.15) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.

Advertisement

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த செப். 16ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது மருத்துவர்களின் கோரிக்கை முழுகையாக ஏற்கப்படாத காரணத்தினால், மருத்துவர்களின் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது. இன்றுடன் 9வது நாளாக இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை மறுநாள் (அக்.15) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"இந்திய மருத்துவ கூட்டமைப்பின் இளநிலை மருத்துவக் குழு மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் வழிநடத்தப்படும். வரும் அக்.15, செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மருத்துவக் கூட்டமைப்பினர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவில் நடைபெற்றுவ ரும் இளநிலை மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 3 மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் ஒத்துழைப்பும் உள்ளது. மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைக்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
KolkataKolkata Doctor CaseKolkata Doctor Deathnews7 tamilProtestWest bengal
Advertisement
Next Article