#KKRvsSRH : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
அதிரடியாக விளையாடிய கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி நேற்று (மார்ச் 22) தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வெற்றிகொண்டது பஞ்சாப் அணி.
இதனையடுத்து மூன்றாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் நரைன் 2 ரன்னில் அவுட் ஆனார்.
இதில் தமிழ்நாடு வீரரான நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மாயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது.