பஞ்சாப் அணிக்கு 262 ரன்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 262 ரன்களை சேர்த்துள்ளது.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் பிலிப் சால்ட் களம் இறங்கினார்.
பிலிப் சால்ட் 6 சிக்சர் 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். சுனில் நரைன் 4 சிக்சர் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். இருவரும் 10.2 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களும், ரஸல் 24 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 261 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர், சேம் கரன், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.