“கொக்கி குமார் கதாபாத்திரம் ஓர் உணர்வு” - நடிகர் தனுஷ் பதிவு!
'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, “கொக்கி குமார் கதாபாத்திரம் ஓர் உணர்வு” என நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் 'ராயன்'. இந்த திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள 'ராயன்' திரைப்படம் வருகிற ஜூன் 13ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' திரைப்படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், 'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!
அதில் இவர் தெரிவித்திருப்பதாவது :
"ஒரு நடிகருக்கு திரை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் அழுத்தமானதாக அமையும். இதுபோன்ற கதாபாத்திரம் தான் கொக்கி குமார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. நான் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். கொக்கி குமார் ஒரு எமோஷன்,"
இவ்வாறு நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.