கோலி, ஹேசல்வுட் அதிரடி... சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பெங்களூரு அணி!
நடப்பு ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் சின்னசாமி மைதானத்தில் நேற்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக கிங் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் அடித்தனர்.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது 5வது அரைசதததை பதிவு செய்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இதனையடுத்து 206 வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.
20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இரண்டு அணிகளுமே வெற்றிப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளன.
இதில் எந்த அணி தோல்வியை பெறுகிறதோ அது ப்ளே ஆஃப் செல்வதற்கான தகுதியை இழக்கும்.