கோடியக்கரை: மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய நண்டுகள் | மீனவர்கள் மகிழ்ச்சி!
கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் நண்டுகள் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடி சீசன்
துவங்கிய நிலையில் பல்வேறு மாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில்
செய்து வருகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரை நடைபெறும் இந்த மீன்பிடி சீசன்
காலத்தில் வெளியூர் மீனவர்களுடன் உள்ளுர் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடி தொழிலுக்கு செல்கின்றனர். நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர்களது வலையில் நீலக்கால் நண்டு, புள்ளிநண்டு, கல்நண்டு, சிலுவை நண்டு மற்றும் இறால் வகைகள் அதிக அளவு கிடைத்தது. அதிக அளவில் நீலக்கால் நண்டு கிடைப்பதால் அந்த நண்டுகள் கோடிக்கரை கடல் பகுதியிலேயே அவிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஜஸ்கீரிம் செய்ய அனுப்பிவைக்கபடுகிறது.
இதையும் படியுங்கள்: திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
கடந்த ஆண்டு கிலோ ரூ.700 -க்கு விலை போன நீலக்கால் நண்டு தற்போது ரூ.400 -க்கு விலை போகிறது. இதற்கு காரணம் கோடியக்கரையில் அதிக அளவு கிடைக்கும் நீலக்கால் நண்டு, இந்தோனேசியா நாட்டிலும் அதிக அளவில் கிடைக்கிறது.
இங்கு விற்பனையாவதை விட இந்தோனேசியாவில் பல மடங்கு விலை குறைவாக கிடைப்பதால் அங்கிருந்து பல நாட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் கோடியக்கரையில் நீலக்கால் நண்டின் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சியடைந்து இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 5 டன் நண்டு கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.