Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த மாதம் தொடங்குகிறது டென்னிஸ் நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி! - தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தகவல்!

07:37 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் முதல் முறையாக டென்னிஸ் கிளப்புகளுக்கு இடையான நாக் அவுட்
சாம்பியன்ஷிப் போட்டி வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை
நடைபெறுகிறது.

Advertisement

தமிழ்நாட்டின் முதல் முறையாக "RWD ஓபன் சென்னை சிட்டி கிளப் லீக் நாக்அவுட்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2024" போட்டி நடத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டென்னிஸ்  சங்கத்தின் செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த கிளப்புகளுக்கு இடையான டென்னிஸ் போட்டி 45 நாட்கள் நடைபெறும் என்றும்
இதில் 5 இரட்டையர்கள் பிரிவுகள் உள்ளடக்கிய 30 வயதுக்கு மேற்பட்டோர் 35
வயதுக்கு மேற்பட்டோர் 45 வயதுக்கு மேற்பட்டோர் 55 வயதுக்கு மேற்பட்டோர் என
பல்வேறு பிரிவின் கீழ் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் பிரேம்குமார் கூறியதாவது :

"எந்த விளையாட்டுக்கும் வயது ஒரு தடை கிடையாது.‌ எல்லா கிளப்புகளும் சிறுவர்கள்
விளையாடுவதில்லை. வயதானவர்கள் தான் விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டில் கிளப் அளவில் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்.ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை 45 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.‌

இதையும் படியுங்கள் :டிஎன்பிஎல் கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தியது திருப்பூர் தமிழன்ஸ் அணி!

இந்த போட்டிக்காக மட்டும் மொத்தம் ஆர்.எம். டி நிறுவனம் சார்பில் ஐந்து லட்ச
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசு தொகைக்காக 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ஒரு லட்சம் வழங்கப்பட உள்ளது.சென்னையில் உள்ள 13 டென்னிஸ் கிளப்புகளில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.போட்டியை அனைவரும் வந்து காணலாம் அனைவருக்கும் அனுமதி இலவசம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.எம்.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபிப் கூறுகையில் :

"எனக்கு டென்னிஸ் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் இருக்கிறது. நானும் ஒரு
டென்னிஸ் வீரர் தான். எனவேதான் இந்தப் போட்டிக்காக ஸ்பான்சர் செய்துள்ளோம். குறிப்பாக கிரிக்கெட்டைத் தவிர மற்ற போட்டிகளுக்கு ஸ்பான்சர்கள் இங்கே குறைவாக தான் இருக்கின்றனர்.‌ இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக
இதுபோன்ற விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்கிறோம்.‌" எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
#ChampionshipAugustKnockoutLeague Knockout Tennis Championship 2024RWD Open Chennai City ClubSeptembertamil nadutennis clubs
Advertisement
Next Article