கேஎல் ராகுல் அதிரடி: லக்னோவை வீழ்த்தி டெல்லி வெற்றி!
ஐபிஎல் 2025 தொடரின் 40வது லீக் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி லெவனில் மோஹித் சர்மா இடத்தில் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டார். லக்னோ அணியில் மாற்றமில்லை.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எய்டன் மார்கம் 52 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 4 விக்கெட்டுகளும், மிட்செல், சமீரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் டெல்லி அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 160 ரன்களை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிப் பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கேஎல். ராகுல் 57 ரன்களும், அபிஷேக் போரெல் 51 ரன்களும் எடுத்தனர். லக்னோ தரப்பில் எய்டன் மார்க்ரம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.