KKRvsSRH | கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் லீக் சுற்றின் 68வது போட்டி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கும், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையே இன்று(மே.25) நடைபெறவுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியனர்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத் அணி பிளேயிங் லெவன்;-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், எஷான் மலிங்கா
கொல்கத்தா அணி பிளேயிங் லெவன்;-
குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே, மனிஷ் பாண்டே, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா
அன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி