Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

KKRvsLSG | வெற்றிக்கு போராடிய ரிங்கு சிங் - 4 ரன்கள் வித்தியாசத்தில் தட்டிச் சென்ற லக்னோ!

கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி த்ரில் வெற்றியடைந்துள்ளது.
08:23 PM Apr 08, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில்,இன்று(ஏப்ரல்.08) அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை தனது ஹோம் கிரவுண்டா ஈடன் கார்டனில் எதிர்கொண்டது.  இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

முதல் இன்னிங்ஸில்  லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் , மார்க்ராம் 47 ரன்களும் , நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும் அடித்து அசத்தினர். மொத்தமாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 238 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 239 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் குயின்டன் டி காக், சுனில் நரைன் ஆகியோர் ஓப்பனிங் செய்தனர். குயின்டன் டி காக் 15 ரன்கள் அடித்து ஆகாஷ் தீப்பிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பின்பு சுனில் நரைன் 30 ரன்களில் திக்வேஷ் சிங்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனிடையே கேப்டன் ரஹானே அதிரடியாக விளையாடி 61 ரன்களில் ஷர்துல் தாக்கூரிடம் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்கள் அடித்தார். இறுதியாக களத்திற்கு வந்த ரிங்கு சிங் வெற்றிக்காக தனி ஆளாக போராடி  38 ரன்கள் எடுத்தார். இருப்பினும் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றியை தட்டிச் சென்றது.

Tags :
Ajinkya RahaneCricketIPL2025KKRvsLSGLucknow Super GiantsRINKU SINGHRishabh Pant
Advertisement
Next Article