KKRvsLSG | லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில்,இன்று(ஏப்ரல்.08) அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியை தனது ஹோம் கிரவுண்டா ஈடன் கார்டனில் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளன. இதன் மூலம் புள்ளி பட்டியளில் கொல்கத்தா அணி 5 வது இடத்திலும், லக்னோ அணி 6வது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில், குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே , வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் லக்னோ அணியில், மிட்செல் மார்ஷ், மார்க்ராம், நிக்கோலஸ் பூரன்,
ரிஷப் பந்த், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர் , அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான் , திக்வேஷ் சிங் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.