Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vettaiyan படத்தில் மாஸ் காட்டும் கிஷோர்... கவனம் பெறும் அறிமுக வீடியோ!

07:37 AM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

'வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்துள்ள கிஷோர் கதாபாத்திர அறிமுக வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் மனசிலாயோ பாடல் அண்மையில் வெளியாகி தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் கடந்த 20ம் தேதி வெளியாகி கவனம் பெற்றது.

https://twitter.com/LycaProductions/status/1839583309199745047

முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை கடந்த 16ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன், அபிராமி ஆகியோரில் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், தற்போது ‘வேட்டையன்’ திரைப்படத்தில் 'ஹரிஷ்' என்ற கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Tags :
actor rajinikanthanirudhkishoreLyca Productionmovie updatenews7 tamilRajinikanthtamil cinemaThalaivarVettaiyan
Advertisement
Next Article