Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு - திருச்செந்தூரில் அதிர்ச்சி!

08:03 AM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார்.

இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் ஆகிய இருவரும் நேற்று மாலை யானையுடன் செல்பி புகைப்படம் எடுத்து யானையை தட்டிக்கொடுத்துள்ளார். அப்போது திடீரென ஆக்ரோஷமடைந்த தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. இதனை கண்ட உதயகுமார் தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் இருவரையும் யானை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் : மகராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் மீது கல்வீசி தாக்குதல் - #ElectionCampaign நிறைவடைந்த நிலையில் பதற்றம்!

மேலும், யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பிறகே யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Elephantelephant attackkilledNews7Tamilnews7TamilUpdatesTiruchendur Temple
Advertisement
Next Article