குழந்தையின் கார் கேம் - வைரலாகும் பதிவு!
போக்குவரத்து நெரிசல் தொடர்பாக பவன் என்பவரின் X தள பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக எந்த ஒரு சுப காரியத்திற்காகவும் வேறு இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டுமென்றால் 2 மணி நேரத்திற்கு முன்பே புறப்படும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில், ஒரு மணமகள் பெங்களூரில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி தனது திருமணத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைந்தார்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. மெட்ரோவின் தானியங்கி நுழைவு வாயில் வழியாக செல்லும் போது மணமகள் கேமராவை நோக்கி கை அசைப்பது போன்று வீடியோயில் காணப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஒளிரும் இந்து குஷ் மலைத்தொடரின் புகைப்படத்தை பகிர்ந்த நாசா விண்வெளி வீரர்!
இந்த காணொளியில் மணப்பெண் பளபளக்கும் சேலை, கனமான நகைகள் மற்றும் மேக்கப் அணிந்து மெட்ரோவில் பயணித்திருந்தார். பின்னர் திருமண நடைபெற்ற இடத்திற்கு வந்து மேடையில் அமர்ந்து விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் பவன் என்பவரின் X தள பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் அதில் "எனது 2.5 வயது மருமகன் பெங்களூர்காரன், என்பதால் அவனது கார் கேமிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது." என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.