Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கப்பல் மூழ்கி விபத்து - பேரிடராக அறிவித்தது கேரள அரசு!

கொச்சி அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்தது.
07:21 PM May 29, 2025 IST | Web Editor
கொச்சி அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்தது.
Advertisement

லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான 184 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3, கடந்த மே 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது. கப்பலில் இருந்த மாலுமிகள் உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

இதன்பேரில் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கப்பலில் மொத்தம் 24 பேர் இருந்த நிலையில் 9 பேர் லைப் ஜாக்கெட் அணிந்து கடலில் குதித்து உயிர்தப்பினர். முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட சூழலில், 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து, கடந்த 26ம் தேதி கப்பல் கேப்டன் உட்பட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் ஏற்றி வரப்பட்டது. இந்த எண்ணெய் கடலில் கலந்து, மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கடலிலோ அல்லது கடற்கரையிலோ எண்ணெய் அல்லது கண்டெய்னர்களை கண்டால், பொதுமக்கள் அதனை தொடாமல், அருகே உள்ள கடலோர காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்து உள்ளது. கப்பலில் வெடிக்க கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியனவும் உள்ளன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags :
container shipKeralaKochiKochi Ship Accidentnews7 tamilNews7 Tamil Updatesshipship accident
Advertisement
Next Article