பிரதமர் மோடி பங்கேற்ற கேரள நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது!
கேரள நடிகர் சுரேஷ்கோபி தனது மகள் பாக்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிந்துள்ள நிலையில், அது தற்போது வைரலாகியுள்ளது.
சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ்-க்கும் ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் இன்று குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்களை சுரேஷ் கோபி தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தார்.
இவர்களின் திருமணத்தில் கேரளாவை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் கேரள திரையுலக ஜாம்பவான்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அதிலும், மம்முட்டி மற்றும் மோகன்லால், அவர்களது குடும்பத்தினருடன், விழாக்களில் பங்கேற்பதற்காக முன்னதாகவே வந்திருந்தனர்.