திடீரென பற்றிய 'தீ'.. மளமளவென எரிந்த கார்!
10:14 AM Dec 24, 2023 IST
|
Web Editor
Advertisement
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ
பிடித்து எரிந்தது.
Advertisement
கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேப்பரம்பு - ஒலவக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த ஓமினி காரின் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இன்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்ததும் காரின் ஓட்டுநர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையும் படியுங்கள்: தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Next Article