#Karur-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்! போலி தகவலால் பரபரப்பு!
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் செய்தால் உடனே கிடைக்கும் என்று சமூக
வலைதளங்கள் தகவல் 100 க்கும் மேற்பட்ட மனு கொடுக்க வந்த மக்களுக்கு ஏமாற்றமடைந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு
மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பலருக்கு ரூ.1000 உரிமை தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், ரூ.1000
பெறுவதற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கரூரில் சிறப்பு
முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதையடுத்து, இன்று மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க குவிந்தனர். ஆனால் மாவட்ட
நிர்வாகம் இந்த தகவலை அனுப்பவில்லை தெரிவித்தனர்.மகளிர் உரிமைத்தொகை குறித்து பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வாழ வழியில்லாதவர்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கி - கொந்தளித்த #Wayanad மக்கள்!
வசதி படைத்தவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள் பலமுறை மனு கொடுத்தும் இன்னும் எங்களுக்கு வழங்கவில்லை என்று அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.