கரூர் துயரம் - பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்..!
கடந்த 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள், மநீம கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
அத்துடன் அவர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்து, ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார்.
முன்னதாக கமலஹாசன் விபத்து நிகழ்ந்த வேலுச்சாமி புரம் பகுதியை ஆய்வு செய்தார்.