Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக இரட்டை சதம் விளாசி கருண் நாயர் அசத்தல்!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி கருண் நாயர் அசத்தியுள்ளார்.
08:25 PM May 31, 2025 IST | Web Editor
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி கருண் நாயர் அசத்தியுள்ளார்.
Advertisement

காண்டர்பெரியில் அன் அஃபிசியல் டெஸ்ட் போட்டி இந்தியா ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

முதல் நாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் கருண் நாயர் அதிரடியாக விளையாடி 186* ரன்கள் குவித்து அவுட்டாகாமல் களத்தில் நின்று அசத்தி வந்தார். அவருடன் துருவ் ஜூரெல் 82* ரன்களுடனும் களத்தில் இருந்தார். இதில் . சர்பராஸ் கான் 92 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் மூலம் முதல் நாளில் இந்திய ஏ அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்கள் அடித்தது.

இந்த நிலையில் இன்று(மே.31) நடந்த இரண்டாது நாள் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் 204 அடித்து ஆட்டமிழந்தார். இதனிடையே துருவ் ஜூரெல் 94 ரன்களிலும், நிதிஷ் ரெட்டி 7 ரன்களிலும் ஷர்துல் தாகூர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து 2வது நாள் டெஸ்டில் இந்திய ஏ அணி ஆல் அவுட்டாகி 557 ரன்கள் குவித்தது. இதையடுத்து தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணி சேஸிங் செய்து வருகிறது.

Tags :
IND A vs ENGKarun NairTest Cricket
Advertisement
Next Article