Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கார்த்தியின் 'மெய்யழகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

05:32 PM Jul 17, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகும் 'மெய்யழகன்' திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியன 'ஜப்பான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 96 திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து 'மெய்யழகன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் கார்த்தியின் 27வது படமாகும்.  இத்திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில்,  இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ திரைப்படம் திரைக்கு வருகிறது. தற்போது கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Actor karthiAravind SwamycinemaKarthiMeiyazhaganMeiyazhagan Release Datemovie updaterelease date
Advertisement
Next Article