Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கார்த்திகை தீபத்திருவிழா | கோயில் கருவறை முன்பு ஏற்றப்பட்டது பரணி தீபம்!

06:57 AM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

கார்த்திகை தீபத்தையொட்டி இன்று அதிகாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.  இதனையடுத்து, இன்று மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவள்ளது.

Advertisement
Next Article