Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கார்த்தி26’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

09:21 PM May 25, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் கார்த்தியின் 26வது திரைப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவரின் 25வது திரைப்படம் ஜப்பான். இதனையடுத்து இவரின் 26வது படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை கார்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கார்த்தியின் 27வது படத்தை ‘96’ பிரேம்குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மெய்யழகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
KarthiKarthi26kumarasamyrajkiranSathyarajVaa Vaathiyaar
Advertisement
Next Article