Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க #Karnataka அரசு முடிவு!

11:10 AM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது, இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மாதவிடாய் விடுமுறை குறித்து ஆய்வு செய்ய மருத்துவர் சப்னா முகர்ஜி தலைமையில் மாநில அரசு குழு அமைத்த நிலையில், இந்த குழு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆய்வுக் குழுவின் அறிக்கை குறித்து  கர்நாடக  மாநில தொழில்துறை செயலாளர் முகமது மொஹ்சின் கூறியபோது:

“இந்த அறிக்கை குறித்து அனைத்து துறைகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியவுடன், அதன்பின் ஒப்புதலுக்கு சட்டப்பேரவையில் இந்த திட்டம் குறித்த அறிக்கை முன்வைக்கப்படும். முதலில், தனியார் நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அரசு துறைகளிலும் கட்டாயமாக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களில் மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், இது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது, நாங்கள் உத்தரவிட முடியாது. மத்திய தொழில்துறை இது குறித்து கொள்கை வகுக்கலாம்” என பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
KarnatakaKarnataka GovernmentMenstrual Leavemenstrual leave policy
Advertisement
Next Article