Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காரைக்குடி பொண்ணு...அமெரிக்க மாப்பிள்ளை... பாரம்பரிய முறையில் நடந்த திருமணம்!

05:10 PM Jan 22, 2024 IST | Web Editor
Advertisement

மாக்கோலம், மாவிலை தோரணம், நாதஸ்வர கெட்டிமேளம் போன்ற பாரம்பரிய செட்டிநாட்டு சடங்குகளுடன் அமெரிக்க மாப்பிள்ளையை காரைக்குடி மணமகள் கரம் பிடித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துபட்டணம் சிதம்பரம், மீனாள் தம்பதியின்
மகள் பிரியா. இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் வசித்து வருகிறார்.
அங்குள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்கு இவருக்கும் மைக்கேல் ஏஞ்சல் தம்பதியின் மகன் சாம் என்பவரும் பழக்கம்
ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : நாங்களும் சளைத்தவர்கள் அல்ல… பெங்களூருவில் ராமர் கோயிலை திறந்து வைத்த சித்தராமையா!

பின்னர், இருவரும் காதலித்துள்ளனர். இது குறித்து பிரியா தனது குடும்பத்தில் தெரிவித்து சம்மதம் பெற்ற நிலையில் பிரியா தமிழ் கலாச்சார பாரம்பரிய முறைப்படி பிறந்த ஊரில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

மேலும், இரு வீட்டார் சம்மதத்துடன் செட்டிநாட்டு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி மாக்கோலம், மாவிலை, தோரணம், அரசனிக்கால், மணவறை, நாதஸ்வர இசையில் கெட்டிமேளம் முழங்க காரைக்குடியில் பிறந்து வளர்ந்த வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் செட்டிநாட்டு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில் பாரம்பரிய உடையில் பாரம்பரிய பங்களாவில் வலம் வந்து மணமக்களை அனைவரும் வாழ்த்தினர்.

Tags :
American groomKaraikudi bridetraditional marriage
Advertisement
Next Article