"அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும்" - அமெரிக்கா கருத்து!
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்துள்ளோம் என அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரையையொட்டி, உணவகங்களை நடத்தும் இஸ்லாமிய உரிமையாளர்கள் தங்கள் பெயரை குறிப்பிட மாநில அரசு கட்டாயப்படுத்துவதாக வெளியான அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது :
"கன்வார் யாத்திரை வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர்களை வைப்பது, தொடா்பாக வெளியான அறிக்கைகளையும், இந்த விதிகளை அமல்படுத்த இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதையும் நாங்கள் அறிந்துகொண்டோம். தற்போது இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை.
இதையும் படியுங்கள் : பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!
கன்வார் யாத்திரை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம். உலகில் உள்ள அனைவருக்கும் மதச் சுதந்திரம் உள்ளது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்துள்ளோம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.